Skip to main content

ஒரு சின்ன காதல் கதை

ரகுவும் கவிதாவும் காதலர்கள். ரகுவின் அம்மா உடல்நலமின்றி வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். கவிதாவின் வீட்டில் அவளது மாமன் மகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். இந்நிலையில் கவிதா வீட்டைவிட்டு வெளியேறி ரகுவை சந்திக்க வந்திருந்தாள். இதன் பின்னான சிறிய உரையாடலைக் காண்போம்.


ரகு                    : என்ன திடீர்னு            வந்திருக்கிற?


கவிதா             : எங்க வீட்ல என்னோட மாமா பையன கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. அதான் வீட்ட விட்டு ஓடி வந்திட்டேன்.


ரவி

ரகுவின் தம்பி   : அம்மாவ நான் பார்த்துக்கிறேன். நீ எங்கயாவது இவங்கள கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்க.


இந்து 

ரகுவின் தோழி :  நாங்கல்லாம் இருக்கோம்ல. அம்மாவ அப்டியேவா விட்ருவோம். அவ உன்ன நம்பி வீட்ட விட்டு வந்துருக்கா, அவள விட்றாத. அம்மாவ நாங்கல்லாம் பாத்துக்குறோம்.


ரகு                        : கவிதா அம்மா இப்போ சீரியஸா இருக்காங்க. இப்ப எனக்கு அம்மாதான் முக்கியம். நீ வீட்டுக்கே திரும்பவும் போயிடு. 


கவிதா                  : டேய் உன்னை நம்பி வந்தா என்ன திரும்பி வீட்டுக்கே போக சொல்றியா? இன்னிக்கி நா வீதியில் நிக்கிறேன், நீயும் ஒரு நாள் இதே மாதிரி நிப்ப.


 கவிதா திட்டி விட்டு தன் வீட்டிற்கு செல்கிறாள். அங்கே மாமன் மகனுடன் திருமணம் நடக்கிறது.  ரகுவின் தாயார் இறந்து விடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு ரகுவிற்கு திருமணம் நடக்கிறது. 


 சில சமயங்களில் விட்டுக்கொடுத்து சென்றால்தான் காதலும் வாழும். காதல் என்றால் அன்பு என்ற பொருளும் உண்டு.

Comments